சிங்கூர் நிலம்-திருப்பி தர நஷ்டஈடு கேட்டு டாடா பிடிவாதம்

சிங்கூரில் டாடா கார் தொழிற்சாலை அமைக்க விவசாயிகளிடமிருந்து பல ஏக்கர் நிலத்தை மேற்கு வங்க அரசு கையகப்படுத்தியது.
நானோ கார் தொழிற்சாலை அமையத் துவங்கியதுமே, இந்த தொழிற்சாலைக்கு திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து பெரிய போராட்டம் நடத்தினார்.
தடியடி, துப்பாக்கி சூடு என பெரும் கலவரமாகிப் போனது அந்தப் போராட்டம். பின்னர் அந்த தொழிற்சாலை குஜராத் மாநிலத்திற்கு ஒரே இரவில் மாற்றப்பட்டது.
டாடாவுக்கு அளிக்கப்பட்ட நிலத்தில் மின் உற்த்தி நிலையம் அமைக்கப்படும் என்றும் ரெயில்வே பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் தினசரி ஒரு அறிக்கை வெளிவந்து கொண்டிருந்தது மேற்கு வங்க அரசு மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடமிருந்து.
இந்த நிலையில் டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரத்தன் டாடா, சிங்கூர் நிலத்திற்கு மேற்கு வங்க மாநில அரசு உரிய நஷ்ட ஈடு வழங்கினால் மட்டுமே அந்த நிலம் திருப்பித் தரப்படும் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.
இந்த விஷயத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது திரிணாமூல் காங்கிரஸ். நிபந்தனையின்றி நிலத்தை டாடா நிறுவனம் ஒப்படைக்க வேண்டும் என்று கூற ஆரம்பித்துள்ளனர்.
எனவே மீண்டும் போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications