4 வெளிநாட்டு தொலைபேசி நிறுவனங்களுக்கு ரூ 120 கோடி அபராதம்!
டெல்லி: விதிமுறைகளை மீறியதாக நான்கு வெளிநாட்டு தொலைபேசி நிறுவனங்களுக்கு ரூ 120 கோடி அபராதம் விதித்துள்ளது மத்திய அரசு.
ஏடி அண்ட் டி, எம்சிஐ (வெரிசோன்), ஈக்வண்ட் மற்றும் பிடி ஆகிய நான்கு நிறுவனங்களும்தான் இப்படி தண்டனைக்குள்ளாகியுள்ளன.
இந்த நான்கு நிறுவனங்களும் விஸ்என்எல், ரிலையன்ஸ் மற்றும் பார்தியிடமிருந்து ஐஎல்டி (International Long Distance) சர்வீஸைப் பெற்று வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ஆனால் இந்த சர்வீஸுக்கு பில்களை உருவாக்கி வருமானமும் பெற்றுள்ளன இவை. இதனால் அரசுக்கு ILD லைசென்ஸ் கட்டணம் செலுத்தாமலேயே அந்த வசதியை இவை விற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ 100 கோடிக்கும் அதிகமான இழப்பை மத்திய அரசு சந்தித்துள்ளது. ஏடி அண்ட் டி ரூ 87 கோடியும், பிடி ரூ 11.77 கோடியும், ஈக்வன்ட் ரூ 11.66 கோடியும் அபராதம் செலுத்த வேண்டும். எம்சிஐக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவல் இல்லை.
இந்த நிறுவனங்களால் அரசுக்கு ஏற்பட்ட உண்மையான நஷ்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
அதே நேரம், இந்த நான்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஐஎல்டி விற்ற இந்திய நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications