அடுத்த தேசிய அறிவியல் மாநாடு சென்னையில்
திருவனந்தபுரம்: அடுத்தாண்டு 98வது இந்திய அறிவியல் மாநாடு சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் ஐந்து நாட்கள் நடைபெற்ற 97வது இந்திய அறிவியல் மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்திய அறிவியல் மாநாட்டு சங்கம் சார்பில் கேரள பல்கலைக் கழகம் மற்றும் இஸ்ரோ ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டில் விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் என சுமார் 3,500 கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
மாநாட்டு நிறைவையொட்டி மாநாட்டு சங்க செயலாளர் அஷோக் சக்ஸேனா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
'நடந்துமுடிந்த மாநாட்டின் மூலமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிபுணர்கள் அளித்த பரிந்துரைகள் மற்றும் கருத்துக்கள் அந்தந்த துறைவாரியாக மத்திய அரசின் பார்வைக்கு வைக்கப்படும்.
அடுத்த ஆண்டுக்கான 98வது அறிவியல் மாநாடு சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் அடுத்த மாநாடு நடைபெறும்' என்றார்.












Click it and Unblock the Notifications