திருப்பூண்டி-லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம்: நாகப்பட்டனம் மாவட்டம் திருப்பூண்டியில், நகை மதிப்பீட்டாளரிடம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்.

நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற்றவர்.

நகை ஏலதாரர் உரிமத்துக்கு பரிந்துரை கடிதம் பெற கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்துக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் பரிந்துரை கடிதம் வழங்க ரூ. 1,500 லஞ்சம் தர வேண்டும் என தாசில்தார் அமுதா வலியுறுத்தினார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார் ராஜ்குமார். போலீஸாரின் அறிவுரைப்படி, நேற்று தாசில்தார் ஆபீசுக்கு சென்று அமுதாவிடம் ரூ. 1000 லஞ்சம் கொடுத்தார் ராஜ்குமார்.

பணத்தை அமுதா வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார், பணமும், கையுமாக அமுதாவைக் கைது செய்தனர்.

பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தாசில்தார் அமுதா திருவாரூர் பெண்கள் சிறையில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+