சிகாகோவில் கடும் பனிப் புயல்-500 விமானங்கள் ரத்து
Subscribe to Oneindia Tamil

அங்கு தற்போது 8 முதல் 12 இன்ச் அளவுக்கு பனி கொட்டி வருகிறது. இதனால் நகரமே கிட்டத்தட்ட உறைந்து போய்க் கிடக்கிறது.
வடக்கு இல்லினாய்ஸ், வட கிழக்கு இன்டியானா மாநிலங்களுக்கு தேசிய வானிலை சேவை மையம் பனிப் புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. நாளை பிற்பகல் வரை இது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடர் பனி காரணமாக சிகாகோ நகரம் மற்றும் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகலுக்கு மேல் பனிப் புயல் மேலும் வலுப்பெறும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடும் பனி மற்றும் பனிப் புயல் காரணமாக ஓஹாரே சர்வதேச விமான நிலையம் மற்றும் மிட்வே விமான நிலையங்களில் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
150க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications