மனைவி விருப்பப்படி வேலுப்பிள்ளை இறுதிச் சடங்கு- இலங்கை

இதுகுறித்து அவர் கூறுகையில்,
கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த பொதுமக்களுடன் தங்கியிருந்த நிலையில் பிரபாகரனின் பெற்றோர் ராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து மேல் விசாரணைகளுக்காக கொழும்புக்கு இவர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பனாகொட ராணுவ முகாமில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
1924ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பிறந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஓய்வு பெற்ற அரசு ஊழியராவார். 1943 ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசு ஊழியராக பணியாற்றியுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான அவரரின் இளைய மகனே பிரபாகரனாவார்.
வன்னி இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகளின் பின்னர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இவரும் இவரது மனைவியாரும் கடந்த வருடம் ஜூலை மாதம் 2ஆம் தேதி அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே பனாகொட ராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
நீண்ட காலமாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.
பின்னர் மீண்டும் பனாகொட ராணுவ முகாமிற்கே அழைத்து வரப்பட்ட போதும் நடமாட முடியாத நிலையில் தொடர்ந்து படுத்த படுக்கையாக, மோசமான நிலையில் இருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் நேற்று முன்தினம் இரவு இயற்கை மரணம் எய்தினார்.
அவரது இறுதிச் சடங்குகள் அவரது மனைவி மற்றும் உறவினர்களின் விருப்பப்படி நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் நாணயக்காரா.












Click it and Unblock the Notifications