தெலுங்கானா-10 நிமிடத்தில் முடிந்த மத்திய அமைச்சரவை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தெலுங்கானா குறித்து முக்கிய முடிவெடுக்க கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டம் எந்த முடிவையும் எடுக்காமல் கலைந்தது. மொத்தமே 10 நிமிடங்கள்தான் இந்தக் கூட்டம் நடந்தது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. தெலுங்கானா விவகாரத்திற்கு முடிவு காண்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் பத்தே நிமிடத்தில் கூட்டத்தை முடித்து விட்டனர். தெலுங்கானா விவகாரம் குறித்து எந்த முடிவும் இக்கூட்டத்தில் எட்டப்படவில்லை.

இதுகுறித்து அமைச்சரவை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், கேபினட் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியின் கூட்டம் நடந்தது. பத்து நிமிடங்கள் இக்கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள், தெலுங்கானா விவகாரத்திற்கு எப்படித் தீர்வு காண்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது. எனவே முதலில் தங்களுக்குள் பேசி ஒரு சுமூக நிலையை உருவாக்கிய பின்னர் முடிவுக்கு வர காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

இன்றைய கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி, ஜெயபால் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் முக்கியமான நபரான உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொள்ளவில்லை. அவர் தமிழகம் சென்றிருப்பதால் கலந்து கொள்ளவில்லையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+