அகமதாபாத் குண்டுவெடிப்பு: 62 பேர் மீது குற்றப்பத்திரிகை

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை வரும் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில், இதுதொடர்பாக 62 பேர் மீது குற்றப்பத்திரிகை தயாராகியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் அகமதாபாத் நகரில் தொடர் குண்டு வெடித்து 57 பேர் பலியானார்கள். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பான வழக்கு அகமதாபாத்தில் உள்ள பேலாதிரிவேதி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக 95 பேரை போலீசார் குற்றவாளிகளாக அடையாளம் கண்டனர்.

இதில் முக்கிய குற்றவாளிகளான அபு பஷிர், ஜாகித் ஷேக், கயாமுதீன், அப்துல் ரஸாக் ஆகியோர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் உட்பட வழக்கில் தொடர்புடைய மொத்தம் 62 பேர் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 33 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 2007ம் ஆண்டு முதலே இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டு, வெடிப் பொருட்கள் அகமதாபாத் நகருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்காக மும்பையில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களை திருடுவதில் உடந்தையாக இருந்தவர்கள், வெடிபொருட்களை கைமாற்ற உதவி செய்தவர்கள், வெடிகுண்டு பொருத்த சைக்கிள்களை ஏற்பாடு செய்தவர்கள், வேவு பார்த்து தகவல் கொடுத்தவர்கள் என இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
இந்த

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+