'பசுமை மதுரை' திட்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை நாடாறுமன்றத் தொகுதி முழுவதையும் பசுமையாக்க ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நாளை தொடங்கி வைக்கிறார்.

மதுரையை பசுமையாக்குவதாக தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த திட்டத்தை தொடங்குவதாக அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையொட்டி மதுரை மாநகரிலும், மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிற பகுதிகளிலும் 14 வெவ்வேறு வகையிலான மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

மலைவேம்பு, இச்சி, நாவல், மகிழம், வாதாமரம், குமிழ், தண்ணீர் மரம், மலைப் பூவரசு, பெல்டோபோரம், விருசபழம், ஃபிளேம் ஆஃப் தி ஃபாரஸ்ட் சிவப்பு மற்றும் மஞ்சள், இலுப்பை, சந்தனம் ஆகிய மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

வனத்துறை, வேளாண்மை துறை மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன. இத்திட்டத்திற்காக தனியாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை அழகர் கோவில் சாலை, தாமரைத் தொட்டி அருகே உள்ள இந்த இக்குழுவின் அலுவலகத்தில் குடியிருப்போர் சங்கங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் விண்ணப்பித்து தேவையான மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் துவக்கவிழா மதுரையில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அமைச்சர் மு.க.அழகிரி, அவருடைய மனைவி காந்தி அழகிரி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+