மாணவி கடத்தல்: பள்ளியை கண்டித்து போராட்டம்
சென்னை: மாணவியை ஆசிரியரே கடத்திச் செல்லும் அளவுக்கு மெத்தனமாக இருக்கும் பள்ளி நிர்வாகிகளை மாற்றக்கோரி சென்னையில் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
சென்னை எருக்கஞ்சேரி டான்போஸ்கோ பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அமலன் பிளஸ் 2 மாணவியுடன் கடந்த வாரம் தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் மீண்டு வந்த மாணவி ஆசிரியர் தன்னை வேளாங்கன்னிக்கு கடத்திச்சென்று கற்பழித்துவிட்டதாக புகார் கூறினார்.
ஆனால், ஆசிரியர் அமலன் இன்னும் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாகவே உள்ளார். இந்நிலையில், பள்ளிக்கு எதிராக பெற்றோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறந்ததாகவும், இந்நிலையில் மற்றொரு மாணவியை ஆசிரியரே கடத்திச் சென்று கற்பழித்த சம்பவமும் நடத்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பெற்றோர் கூறினர்.
இதனால் பள்ளியின் நிர்வாக குழுவில் உள்ளவர்களை மாற்ற கோரி பெற்றோர் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications