போகி கொண்டாட்டம்-இந்த ஆண்டு புகை குறைவு
சென்னை: பொங்கல் பண்டிகையின் முதல் நாள் கொண்டாட்டமான போகி இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகளில் சேர்ந்திருந்த குப்பைகள் உள்ளிட்டவற்றை வீட்டின் முன்பு போட்டு எரித்து மக்கள் கொண்டாடினர்.
பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதே இந்த கொண்டாட்டத்தின் அடிப்டை.
வீட்டை சுத்தப்படுத்தி அதில் இருக்கும் குப்பைகள், பழைய பொருட்களை சேகரித்து வீட்டின் முன்பு போட்டு எரித்து, அதற்கு முன்பு நின்று மேளம் அடித்து மக்கள் புதியவற்றை வரவேற்பது போகிப் பண்டிகையின்போது நடைபெறும் நிகழ்வாகும்.
இன்று போகிப் பண்டிகையையொட்டி மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, பழைய பொருட்களைப் போட்டு எரித்து போகி கொண்டாடினர்.
சென்னையில் அதிகாலையில் நிலவிய பனி மூட்டம் காரணமாகவும், புகை கூடுதலாக சேர்ந்ததாலும் புகை மூட்டமாக மாறிப் போயிருந்தது.
டயர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை எரிக்கக் கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தியிருந்ததால் பல இடங்களில் அவை எரிக்கப்பட்டன. இதனால் துர்நாற்றத்துடன் புகை மண்டலம் கிள்ம்பியது.
இருப்பினும் கடந்த காலங்களைப் போல இல்லாமல் இந்த முறை டயர் எரிப்புகள் குறைவே.












Click it and Unblock the Notifications