பீடி தகராறு: நண்பரை குத்திக் கொன்றவர் கைது
சென்னை: பீடி தர மறுத்த நண்பரை கத்தியால் குத்திக்கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் நரிக்குறவர் காலனியில் வசித்தவர் காந்தாராவ் (40). இதே பகுதியை சேர்ந்தவர் சிவா (28). இருவரும் நேற்றிரவு திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. காந்தாராவ் தான் வைத்திருந்த பீடியை சிவாவுக்கு தர மறுத்ததால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகராறு முற்றி இருவரும் அடிதடியில் இறங்கினர். அப்போது சிவா மறைத்து வைத்திருந்த கத்தியால் காந்தாராவை சரமாரியாக குத்தியுள்ளார்.
ரத்த காயங்களுடன் அலறிய காந்தாராவை அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வழியிலேயே காந்தாராவ் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவான்மியூர் போலீசார் சிவாவை கைது செய்தனர். 'பீடி தர மறுத்ததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்திவிட்டேன்' என்று சிவா போலீசாரிடம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications