தர்மசாலாவில் ஜெர்மனி பெண் கற்பழிப்பு
தர்மசாலா: ஹிமாச்சல் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் கற்பழிக்கப்பட்டார்.
மயங்கிய நிலையில் கிடந்த அவரை போலீஸார் மீட்டுள்ளனர். மயக்கம் தெளிவிக்கப்பட்ட பின்னர் அந்தப் பெண் போலீஸாரிடம் கூறுகையில், தன்னை 2 நாட்களாக சிலர் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்ததாகவும், இரண்டு பேர் தன்னை கற்பழித்ததாகவும் அவர் கூறினார்.
மருத்துவமனையில் வைத்து அவர் வாக்குமூலம் அளித்தார். இதன் பேரில் முதல் தகவல் அறிக்கையைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணுக்கு வயது 46 ஆகும். அவரது பெயர் உள்ளிட்ட பிற விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. தர்மசாலாவில் டிசம்பர் 27 முதல் 28ம் தேதி வரை அவரை இரண்டு பேர் ஒரு இடத்தில் அடைத்து வைத்துக் கற்பழித்துள்ளனர்.
டிசம்பர் 29ம் தேதி அவர்களது பிடியிலிருந்து இப்பெண் தப்பினார். ஆனால் ஜனவரி 7ம் தேதி அவர் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
டிசம்பர் 29ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் அவர் எங்கிருந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
--












Click it and Unblock the Notifications