தாக்குதல் அபாயம்- சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கு பார்வையாளர் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
கூடுதல் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
காமராஜர் உள்நாட்டு முனையம் மற்றும் அண்ணா பன்னாட்டு முனையங்களுக்குள் பார்வையாளர்கள் அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று அமலுக்கு வந்த இந்த தடை ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன. விமான நிலைய புறப்பாடு பகுதியில் உள்ள லவுஞ்சு பகுதியில் எந்த வாகனமும் 2 நிமிடங்களுக்கு மேல் நிற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications