மதுரையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 14 திருடர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை புறநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 14 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை புறநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர். இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் அதிரடி நடவடிக்கை எடுத்தன் விளைவாக , பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்புடைய 14 பேர் கண்டுபிடிக்கப்பட்டது.

தபால் தந்தி நகரில் பூங்கொடி என்பவரிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. ஆணையூரை சேர்ந்த கருப்பசாமி வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை போனது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பெத்தானியாபுரத்தை சேர்ந்த ஆரோக்கிய சாமி, ஆணையூரை சேர்ந்த இளங்கோ ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 13 பவுன் நகையை மீட்கப்பட்டது.

அதே போன்று, ஜனவரி 10 ம் தேதி திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் கம்பம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அருண் குமார் நடந்து சென்ற போது ஒரு பவுன் நகை பறிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவனியாபுரத்தை சேர்ந்த பாலதண்டாயுதபாணி, மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நகை மீட்கப்பட்டது.

மேலஅனுப்பானடி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கைவரிசை காட்டிய மணி, கீதைராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+