அசிங்க அர்ச்சகர் தேவநாதன்-4 பெண்கள் வாக்குமூலம்

மச்சேஸ்வரர் கோவில் கருவறையை படுக்கை அறையாக மாற்றி அசிங்கப்படுத்தியதாக தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கற்பழிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
அவர் மீது நான்கு பெண்கள் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் இருவர் தங்களை மயக்கி கற்பழித்து விட்டதாக கூறியதால் கற்பழிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
அந்த நான்கு பெண்களும் நேற்று காஞ்சிபுரம் 2வது குற்றவியல் மாஜிஸ்திரேட் காயத்ரி முன்பு ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இது இன் கேமரா எனப்படும் ரகசிய வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டதால் கோர்ட் அறைக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் நான்கு பேரும் வாக்குமூலம் தந்தனர். நான்கு பேரும் தங்களது முகத்தை சேலைத் தலைப்பால் மூடியபடி கோர்ட்டுக்கு வந்தனர். அவர்களை போலீஸார் பாதுகாப்புடன் உள்ளே அழைத்துச் சென்றனர்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய விசாரணை 6.15 மணிக்கு முடிந்தது. ஒவ்வொரும் 45 நிமிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். தேவநாதனிடம் தங்களை பறிகொடுத்தது எப்படி என்பது குறித்து அப்போது விளக்கியதாக தெரிகிறது.
இதைத் தொரடர்ந்து தேவநாதனின் மனைவி கங்கா நீதிபதி முன்பு ஆஜரானார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
அப்போது அவரிடம், உங்கள் கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கோவில் கருவறையில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி தெரியுமா என்று நீதிபதி கேட்டதற்கு, எனக்கு தெரியாது. பத்திரிக்கை செய்தியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று அழுதபடி கூறினார் கங்கா.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications