தமிழகத்தில் 7 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:​ தமி​ழ​கத்​தில் முதல்கட்டமாக 7.66 லட்​சம் குடும்ப அட்டைகள் போலி என கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.

த​மி​ழ​கத்​தில் மொத்​தம் 1.86 கோடி குடும்ப அட்​டை​கள் உள்​ளன.​ அவற்​றில் போலி​க​ளை கண்டறிந்து நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மு​தல் கட்​ட​மாக,​​ கோவை,​​ திருச்சி,​​ திருப்​பூ​ரின் சில பகு​தி​கள்,​​ சென்​னை​யில் அண்​ணா​ந​கர் மண்​ட​லம் ஆகிய இடங்​க​ளில் போலிகளை கண்டுபிடிக்கும் பணிகள் நடந்தன.​ இதில் 3 மாவட்​டங்​க​ளில் 2 லட்​சம் போலி குடும்ப அட்​டை​க​ள் நீக்கப்பட்டன.

இரண்டாவது கட்​ட​மாக,​​ நாகப்​பட்​டி​னம்,​​ தூத்​துக்​குடி,​​ தேனி,​​ வேலூர்,​​ சேலம்,​​ கிருஷ்​ண​கிரி,​​ கட​லூர்,​​ தரு​ம​புரி,​​ கரூர்,​​ நாமக்​கல் ஆகிய மாவட்​டங்​க​ளி​ல் 5.66 லட்​சம் அட்​டை​க​ளும் நீக்​கப்​பட்​டன.

முதல் இரண்டு கட்டங்களாக நடந்த தணிக்கையில் மொத்தம் 7 லட்சத்து 66 ஆயிரம் குடும்ப அட்டைகள் போலி என அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.

இதன்பிறகு திரு​வா​ரூர்,​​ தஞ்​சா​வூர்,​​ ராம​நா​த​பு​ரம்,​​ திரு​நெல்வேலி,​​ புதுக்​கோட்டை,​​ விழுப்​பு​ரம்,​​ திரு​வண்​ணா​மலை,​​ பெரம்​ப​லூர்,​​ திண்​டுக்​கல்,​​ ஈரோடு,​​ விரு​து​ந​கர்,​​ அரி​ய​லூர்,​​ திருப்​பூர், சென்​னை​ மண்டலங்கள் ஆகிய இடங்களிலும் தணிக்கை பணிகள் முடிக்​கப்​பட்​டுள்​ளன.​

இந்த மாவட்​டங்​க​ளில் 16.28 லட்​சம் குடும்ப அட்​டை​க​ளுக்கு பொருட்​கள் வழங்​கு​வது நிறுத்​தப்​பட்​டுள்​ளன.​ ஜ​ன​வரி 31ம் தேதி வரை சம்​பந்​தப்​பட்ட அட்​டை​தா​ரர்​கள் மேல்​மு​றை​யீடு செய்​ய​லாம்.​

அப்​படி செய்​யா​விட்​டால் அவர்​கள் குடும்ப அட்​டை​களை நீக்க நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.​

சென்​னை​யில் எந்​தெந்த குடும்ப அட்​டை​க​ளுக்கு பொருட்​கள் வினியோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது என்​கிற பட்டியல் அந்தந்த பகுதி ரேஷன் கடை​க​ளில் அடுத்த வாரம் ஒட்​டப்​படும் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+