இனி, மராத்தியர் மட்டுமே மும்பையில் டாக்சி ஓட்ட முடியும்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மஹாராஷ்டிராவில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே மும்பையில் டாக்சி ஓட்ட முடியும் என்ற புதிய சட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, மும்பையில் டாக்சி ஓட்டுவதற்கு பர்மிட் வாங்கும் டிரைவர்கள், குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் மஹாராஷ்டிராவில் வசித்ததற்கான அத்தாட்சியை காட்டியாகவேண்டும்.
அதோடு, மராத்தி எழுத, பேச மற்றும் படிக்க தெரிந்திருந்தால் மட்டுமே டாக்சி பர்மிட் வழங்கப்படும்.
இன்று காலை மும்பையில் நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர அரசின் இம்முடிவுக்கு மும்பை டாக்சி சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மும்பையில் டாக்சி ஓட்டும் பலர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications