பிப்ரவரி வரை பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிப்ரவரி மாதத்திற்கு பின்னரே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என தெரிகிறது.

சர்வதேச அளவில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனால் பெட்ரோல், டீசல் விலை உடனடியாக உயர்த்தப்படும் என தகவல்கள் பரவின. ஆனால் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அரசு நியமித்த கமிட்டி தனது அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

இந்த கமிட்டி வருகிற 31ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் எனத் தெரிகிறது. இதையடுத்து, கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிபாரிசை பொறுத்து பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை உயர்த்தப்படும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.5.40ம், டீசலுக்கு ரூ.3.65ம் மண்எண்ணெய்க்கு ரூ.17.23ம் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.299ம் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+