ரயில்வே சரக்கு கட்டணம் உயர்கிறது
டெல்லி: ரயில்களில் சரக்குக் கட்டணம் கணிசமாக உயர்கிறது.
இந்தியாவில் சரக்கு போக்குவரத்தில் ரயில்வேக்கு முக்கிய பங்குள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது.
தற்போது ரயில்களில் சரக்கு கட்டணத்தை உயர்த்த ரயில்வே இலாகா முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு இரும்பு தாது, உருக்கு, சிமெண்ட், நிலக்கரி போன்றவற்றுக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உருக்கு மற்றும் இரும்பு தாதுக்கு 10 சதவீதம், சிமெண்ட், நிலக்கரிக்கு 3 சதவீதம் கட்டண உயர்வு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2010-2011-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது இந்த கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
இந்தக் கட்டண உயர்வு மூலம் மட்டும் ரெயில்வேக்கு ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications