முலாயம் 'ஸ்டண்ட்' - அமருக்கு ஒரே ஆச்சரியம்!

முலாயம் சிங் யாதவின் ஊதுகுழல் போல செயல்பட்டவர் அமர்சிங். ஆனால் அவரது 'ஆக்கிரமிப்பும், அட்டகாசமும்' தாங்க முடியவில்லை என்று முலாயமிடம் அவரது மகன் உள்ளிட்ட பலரும் முக்கி முணகவே சற்றே கடிவாளம் போட ஆரம்பித்தார் முலாயம்.
இது பிடிக்காமல் போனதால் கட்சியை விட்டே விலகுவதாக அறிவித்தார் அமர்சிங். 'அண்ணனே' விலகி விட்ட பிறகு நானெல்லாம் எப்படி நீடிக்க முடியும் என்று கூறி நடிகர் சஞ்சய் தத்தும் கட்சியை விட்டு விலகுவதாக கூறினார்.
இப்போது முலாயம் சிங்கை விமர்சித்து பேச, எழுத ஆரம்பித்துள்ளார் அமர்சிங்.
தனது பிளாக்கில் அவர் முலாயம் சிங்கை வாரியுள்ளார். அதில், நான் எனது பிளாக்கை இந்தியில் எழுதுவதால் முலாயம் சிங்கால் அதைப் படிக்க முடிகிறது. முன்பு நான் ஆங்கிலத்தில் எழுதி வந்தேன். அதைப் பார்த்து விட்டு பலரும், நான் முலாயமுக்கு எதிரானவன் என்று சித்தரிக்க ஆரம்பித்தனர்.
இத்தனைக்கும் நான் முலாயம் சிங்கைப் பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் நல்ல மாதிரியாகத்தான் எழுதியிருந்தேன்.
நேதாஜி (முலாயமைத்தான் இப்படி கூறுகிறார்) ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை எதிர்க்கிறார். இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளுக்கு மட்டுமே ஆதரவாக இருக்கிறார்.
அப்படியானால் அவர் ஆங்கிலத்தை எதிர்க்கிறாரா?. அப்படி எதிர்ப்பதானால், தனது பிள்ளைகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து படிக்க வைத்தார்?. இது எனக்குப் புரியவில்லை என்று கூறியுள்ளார் அமர்சிங்.












Click it and Unblock the Notifications