அதிகரிக்கும் 'இ குப்பை'-அப்துல் கலாம் கவலை

பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள், ரெப்ரிஜிரேட்டர்கள் உள்ளிட்டவைதான் இ வேஸ்ட் என அழைக்கப்படுகின்றன. இதுதவிர பயன்படுத்தப்படாத வயர்கள், பேட்டரிகள், பிளக், ஸ்விட்ச்சுகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக், எலக்டிரிகல் பொருட்களும் இ குப்பைகள்தான்.
இதுபோன்ற இ குப்பைகளால் சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பெரும் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இதைத்தான் கலாம் தெரிவித்து கவலை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் நடந்த இ குப்பை ரீசைக்ளிங் குறித்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில், அதிகரித்து வரும் இ குப்பையால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க உரிய முறையில் அவற்றை ரீசைக்கிள் செய்வது அவசியமாகும்.
ஆண்டுதோறும் 10 சதவீத அளவுக்கு இ குப்பைகள் நமது நாட்டில் அதிகரித்து வருகின்றன. ஆனால் நகர்ப்புற இந்தியாவில் வெறும் ஐந்து சதவீத இ குப்பைகள்தான் ரீசைக்கிள் செய்யப்படுகின்றன.
இ குப்பைகளை உரிய முறையில் சேகரித்து அவற்றை ரீசைக்கிள் செய்ய உரிய முறைகளை நாம் கையாள வேண்டியது அவசியம், அவசரம்.
காரணம் அதில் உள்ள காரீயம், மெர்க்குரி உள்ளிட்ட வேதிப் பொருட்களால் பல்வேறு அபாயகரமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்றார் கலாம்.












Click it and Unblock the Notifications