போலி ஜாமீன் சான்றிதழ்-9 பேருக்கு சிறை தண்டனை
நெல்லை: உயர்நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்து ஜாமீ்ன் மற்றும் முன்ஜாமீ்ன் பெற்ற வழக்கில் 9 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் ஆவணங்கள் போலியாக தயார் செய்யப்படுவதாக வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம் கடந்த 1997ம் ஆண்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பெருமாள், எஸ்.ஐ சார்லஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக பாளை அண்ணா நகரைச் சேர்ந்த ஆசிர்கோயில் பிச்சை, பாளையை சேர்ந்த சுப்பிரமணியன், பெருமாள், தாழையுத்து இசக்கி, கரையிருப்பு கணேசன், குமார், பாலு, மேலப்பாளையத்தை சேர்ந்த பாலையா, சுந்தரராஜ், பிரம்மபாக்கியம், ஆகியோர் சிக்கினர்.
இவர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய விசாரணை கைதிகள் மற்றும் போலீசாரால் தேடப்படுபவர்களுக்கு நீதிமன்ற ஆவணங்களைப் போலவே போலியாக தயாரித்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சுந்தரராஜ் தவிர மீதமுள்ள 9 பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், ஆபராதமும் விதித்து தலைமை குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications