அதிமுக மேடையில் பேசிய ஏட்டையா!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை டவுனில் நடந்த அதிமுக கூட்டத்தில் போலீஸ் ஏட்டு கலந்து கொண்டு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை டவுன் தென்பத்து பகுதியில் நேற்று இரவு அதிமுக பொது கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் சிவன் தலைமையில் பாப்புலர் முத்தையா, தலைமை கழக பேச்சாளர் மறவன் ஆகியோர் பேசினர்.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பேட்டை போலீஸ் ஏட்டு மனோகரன் என்பவர் திடீர் என்று மேடையில் ஏறி பேசினாராம். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள அவர் டவுன் பகுதியில் வசித்து வருகிறார். கூட்டத்தில் அவர் பேசியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி உரிய விசாரணை நடத்தி ஏட்டு மனோகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications