ரெட்டி விபத்து: 'பைலட்கள்-தொழில்நுட்ப கோளாறே காரணம'

'பிளைட் மேனுவலை' தேடிக் கண்டுபிடிக்க அவர்கள் எடுத்துக் கொண்ட ஆறு நிமிட அவகாசத்தில்தான் விபத்து நேரிட்டு விட்டதாகவும் அது கூறியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...
மோசமான வானிலை மற்றும் கடும் காற்று காரணமாக ஹெலிகாப்டர் அதி வேகமாக கீழ் நோக்கி இறங்கியுள்ளது. அந்த சமயத்தில் தொழில்நுட்பக் கோளாறும் ஏற்பட்டுள்ளது.
இதனால் பைலட்டுகள் இருவரும் தடுமாறியுள்ளனர். நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறியுள்ளனர். அவசர காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பிளைட் மேனுவைல் அவர்கள் கண்டுபிடிப்பதற்கு ஆறு நிமிடங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த சமயத்தில்தான் விபத்து நேரிட்டு விட்டது.
விமானிகளின் கட்டுப்பாட்டை அந்த சமயத்தில்தான் ஹெலிகாப்டர் இழந்தது. இதன் காரணமாக அதிவேகமாக சென்ற ஹெலிகாப்டர் வனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மேனுவலைத் தேடும் பணியில் அவர்கள் தீவிரமாகவே ஹெலிகாப்டர் செல்லும் திசை மாறிப் போய் விபத்தை சந்தித்துள்ளது.
ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டிருப்பது கிடைத்துள்ள தகவல்களின் படி உறுதியாகியுள்ளது. அதை சரி செய்யும் முயற்சியில் பைலட்டுகள் மின்னல் வேகத்தில் செயல்படத் தவறியுள்ளனர். மாறாக மிக மிக முக்கியமான ஆறு நிமிடங்களை அவர்கள் மேனுவலைத் தேடுவதற்குப பயன்படுத்தியுள்ளளனர். இதனால் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி விழுந்து நொறுங்கியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஹெலிகாப்டரில் என்ன மாதிரியான கோளாறு ஏற்பட்டது என்பதை அறிக்கை விளக்கவி்ல்லை.
2009ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி நல்லமலை காட்டுப் பகுதியில் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளனது குறிப்பிடத்தக்கது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான விவகாரமே 24 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின்னர்தான் தெரிய வந்தது என்பதும் நினைவிருக்கலாம்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு, பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.கே.தியாகி தலைமையில் நான்கு பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. அந்த கமிட்டிதான் தற்போது தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications