தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு ஓட ராஜபக்சே திட்டம்- விமானம் தயார்?!

இலங்கையில் அதிபர் தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ராஜபக்சே தோல்வி அடைவார் என்று இலங்கை முழுவதும் பலமாக பேசப்பட்டு வருகிறது. பொன்சேகாவுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் ராஜபக்சே சுரத்திழந்து போய்க் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தேர்தலில் தோல்வியுற்றால் பாதுகாப்பான முறையில் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேற ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக வருகிற 27ம் தேதி முற்பகல் கொழும்பிலிருந்து ராஜபக்சே குடும்பத்தினர் வெளியேறுவதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றை சிறப்பு ஏற்பாடாக முன்பதிவு செய்து வைத்துள்ளதாம் ராஜபக்சே குடும்பம்.
டாக்காவில் நடைபெறும் சார்க் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிடச் செல்வதாகக் கூறி இந்த விமானத்தை ஒதுக்க ஏர் லங்கா விமான நிறுவனத்தின் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க மேற்கொண்டு வருவதாக அந்த நிறுவனத்தின் தரப்பிலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிசாந்த, ராஜபக்சேவின் மச்சான் அதாவது மனைவி ஷிராந்தியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் குண்டு வெடிப்பு:
இந் நிலையில் கொழும்பில் இன்று காலை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
அதிபர் தேர்தல் நடைபெற 4 நாட்களே இருக்கும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவின் பிரச்சார மேலாளர் திரான் ஆலன்ஸ் வீட்டை குறிவைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. குண்டு வெடிப்பில் திரான் ஆலன்சின் வீடு முற்றிலுமாக சேதமடைந்துவிட்டது.
அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் ராஜபக்சே, சரத் பொன்சேகா ஆதரவாளர்களுக்கு இடையே நடந்துள்ள மோதல்களில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications