பிறந்த குழந்தை பலி- மருத்துவர்கள் கையை வெட்டியதாக புகார்
டெல்லி: அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது, கை வெட்டுபட்ட நிலையில் பிறந்த குழந்தை இரண்டாவது நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
மருத்துவ உபரணங்களை மெத்தனமாகவும், பொறுப்பற்ற முறையிலும் பயன்படுத்தி பெரிய வெட்டுகாயத்துடன் பிறந்த குழந்தைக்கு பல மணிநேரமாக உரிய சிகிச்சை அளிக்காததால் தான் இந்த கொடூரம் ஏற்பட்டதாக குழந்தையின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
டெல்லி அருகே உதய்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ரஞ்தித் என்பவரின் குழந்தைக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து ரஞ்சித் கூறுகையில், 'குழந்தை பிறக்கும் போதே கையில் பெரிய வெட்டு தெரிந்தது. டாக்டர்கள் கத்திகளை பயன்படுத்திய போதே தவறாக கை பகுதியை வெட்டியிருக்கிறார்கள்.
ஆனாலும், இரண்டு நாளாக கட்டுகூட போடவில்லை. என்ன சிகிச்சை தரவேண்டுமோ அதை தரவில்லை. கேட்டதற்கு ரொம்பவும் மெத்தனமாக பதில் சொன்னார்கள். கடைசியில் குழந்தை செத்துவிட்டது என்று சொல்கிறார்கள்' என்று கண்ணீருடன் கூறினார்.
இவரின் புகார் குறித்து அரசு மருத்துமனை டீன் காம்லேஷ் பஞ்சாபியிடம் கேட்டபோது, 'டெலிவரியின் போது கையில் அடிபட்டு விட்டது. ஆனாலும் அது சீரியஸான பிரச்னை இல்லை. அதுபோன்ற சிகிச்சையில் இவ்வாறு நடப்பது சகஜம் தான்' என்றார் சாதாரணமாக.
மருத்துவமனையின் பதிலால் கொந்தளித்துப் போன ரஞ்சித்தின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உதய்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி, பிரேத பரிசோதனை அறிக்கையை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெண்சிசுக் கொலையை தடுக்கவேண்டும் என அரசு அறிவுரை செய்துகொண்டிருக்கிறது. ஆனால், 'உபதேசம் ஊருக்குத் தான் போலிருக்கிறது' என ரஞ்சித்தின் உறவினர்கள் வருத்தத்துடன் கூறினர்.












Click it and Unblock the Notifications