பெண் எஸ்.ஐக்கு அடி-2 வி.சி. நிர்வாகிகளுக்கு குண்டாஸ்
ஈரோடு: ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்த கோசணம் மாகாளியம்மன் கோவில் பிரச்சனை தொடர்பாக, காவல் நிலையத்தில் இருந்த நம்பியூர் போலீஸ் எஸ்.ஐ. காந்திமதியை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் பிளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (36), மாரியப்பன் (34) ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகிகளாக உள்ளனர்.
இவர்கள் மீது அரசு பஸ் கண்ணாடியை உடைத்தது உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில், நம்பியூரை அடுத்த கோசணம் மாகாளியம்மன் கோவில் பிரச்சனை தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த நம்பியூர் போலீஸ் எஸ்.ஐ. காந்திமதியை தாக்கியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தங்கவேல், மாரியப்பன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஜெயச்சந்திரன், மாவட்ட கலெக்டர் சுடலைக் கண்ணனுக்கு பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து, தங்கவேல், மாரியப்பன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சுடலைக்கண்ணன் உத்தரவிட்டார்.
போலீஸ் எஸ்.ஐ காந்திமதியை தாக்கிய வழக்கில் இவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications