சட்டமன்ற குழுவிடம் தணிக்கை அதிகாரி ஆஜர்-விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் உள்ளாட்சித் துறை தொடர்பான ஆடிட்டர் ஜெனரலின் தணிக்கை அறிக்கை குறித்து பேட்டி அளித்தது தொடர்பாக சட்டசபை பொதுக்கணக்குக் குழுவிடம் ஆஜராகி விளக்கம் அளித்தார் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தணிக்கை அதிகாரி சங்கரநாராயணன்.

தமிழக சட்டசபையில், 2007-08-ம் ஆண்டின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தணிக்கை அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த தணிக்கை அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை தணிக்கை அதிகாரி கடந்த 12-ந் தேதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவற்றுக்குப் பயன்படுத்தாமல், இலவசத் திட்டங்களுக்கு தமிழக அரசு பெருமளவில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு முதல்வர் கருணாநிதியும், உள்ளாட்சித் துறையும் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருந்தனர்.

இதற்கிடையே, சட்டசபை உரிமை மற்றும் அதிகாரத்தை பாதிக்கும் விதத்தில் தணிக்கை அதிகாரியின் கருத்துகள் இருப்பதாகவும், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி, சட்டமன்ற பொது கணக்குக் குழு, அவருக்கு சம்மன் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, சென்னை அரசினர் தோட்டத்தில், பொதுக்கணக்குக் குழுத் தலைவர் சிவராஜ் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், சங்கர நாராயணன் நேரில் ஆஜராகி, தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+