ஹைதியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
போர்டா பிரின்ஸ்: ஏற்கனவே இருமுறை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஹைதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
12 நாட்களுக்கு முன்பு 7 ரிக்டர் அளவிலான பயங்கர பூகம்பம் ஹைதி தீவைப் புரட்டிப் போட்டு விட்டது. இந்த பயங்கர பூகம்பத்தில் சிக்கி 2 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். ஹைதியே உருக்குலைந்து போய் விட்டது.
அடுத்த சில நாட்களில் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று 4.7 ரிக்டர் அளவிலான இன்னொரு நிலநடுக்கம் ஹைதியை உலுக்கியுள்ளது.
லியோகன் என்ற நகரைச் சேர்ந்த ஆசிரியர் பாட்ரிஸ் டுமான்ட் கூறுகையில், என்னை யாரோ பிடித்து உலுக்கியதைப் போல உணர்ந்தேன். சில விநாடிகளுக்கு இது இரு்நதது.
ஏதோ நொறுங்குவது போல உணர்ந்தேன். பின்னர் பெரும் சப்தம் கேட்டது என்றார்.
இந்த பூகம்பத்தால் என்ன மாதிரியான சேதம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. புதிய பூகம்பத்தின் மையம் தலைநகர் போர்ட்டா பிரின்ஸிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications