சச்சின் டெண்டுல்கர் வரி ஏய்ப்பு-மும்பை மாநகராட்சி

கிரிக்கெட் வீரர்களியே அதிக அளவில் வருமான வரி கட்டிய வீரராக சச்சின் திகழ்கிறார். ஆனால் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியைக் கட்டாமல் அவர் ஏய்த்துள்ளதாக மும்பை மாநகராட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சச்சின் மட்டுமல்லாமல், பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் மொத்தம் 75,000 பேர் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வாகன வரியைக் கட்டாமல் ஏய்த்துள்ளாக மாநகராட்சி கூறியுள்ளது.
வாகன வரி கட்டாததற்காக சச்சின், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளதாம்.
வரி ஏய்ப்புப் பட்டியில் தற்போது திரிபுரா கவர்னராக இருக்கும் டி.ஒய். பாட்டீல், ரிலையன்ஸ் நிறுவன முக்கியப் புள்ளிகள் ஆகியோரின் பெயர்களும் உள்ளனவாம்.
நடந்தது என்ன...?
புது மும்பை பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மேற்கண்டோர், மும்பை மாநகரில் பயன்படுத்தியதால்தான் இந்த வரி ஏய்ப்புப் பிரச்சினை எழுந்துள்ளதாம்.
மேற்கண்ட 75 ஆயிரம் பேரும் கிட்டத்தட்ட ரூ. 50 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளனராம். மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 1.5 லட்சமாகும்.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டு காலத்தில், சச்சின் டெண்டுல்கர் ரூ. 1.5 கோடி வரி கட்டியதாக சமீபத்தில்தான் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மாநகராட்சி வரியைக் கட்டாமல் சச்சின் ஏய்த்து விட்டதாக சர்ச்சை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முன்னணி வரி கட்டும் நபர்களில் 115வது இடத்தில் இருக்கிறார் சச்சின் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications