துபாயில் 10.32 பில்லியன் டாலர் மோசடி செய்ய முயன்ற கும்பல் கைது!

Subscribe to Oneindia Tamil

துபாய்: போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சென்ட்ரல் வங்கியிலிருந்து ரூ 10.3 பில்லியன் டாலர் பணம் மோசடி செய்ய முயன்ற 7 பேரை ஐக்கிய அரபு எமிரேட் அரசு கைது செய்தது. அவர்களில் 4 பேர் ஆசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் 7 பேரும் அபுதாபி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஏழுபேரும் மோசடியான ஆவணங்கள் மூலம், 10.3 பில்லியன் டாலர்களை சென்டிரல் வங்கியிலிருந்து எடுக்க முயன்றுள்ளனர். காரணம் கேட்டபோது, அந்தப் பணம் தங்கள் குடும்ப முதலீட்டுப் பணம் என கூறியுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் அந்த ஆவணங்களைச் சோதித்தபோது, அவை போலியானவை என்று தெரிய வந்ததாக அபுதாபி சிஐடி இயக்குநர் ஹம்மத் அஹமத் அல் ஹம்மாதி தெரிவித்தார்.

கைதானவர்கள் மூவர் ஐரோப்பியர்களாம். மற்ற நால்வர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள்.

ஐரோப்பிய வங்கி ஒன்றின் கேட்பு ஆணையின் பேரில் இந்தத் தொகையை சென்டிரல் வங்கியிலிருந்து மாற்றத்தக்க வகையில் அந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+