கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யுங்கள் - டாக்டர்களுக்கு கலாம் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

குண்டூர்: மருத்துவப் படிப்பை முடித்து விட்டு வெளியே வரும் இளம் மருத்துவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் மங்களகிரியில் உள்ள என்.ஆர்.ஐ. அறிவியல் அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு எம்.பி.பி.எஸ் முடித்த மாணவர்களுக்கு டாக்டர் பட்டங்களை வழங்கி பேசுகையில் இவ்வாறு கோரிக்கை விடுத்தார் கலாம்.

அவர் பேசுகையில், இளம் மருத்துவ பட்டதாரிகள், மருத்துவ வசதியே கிடைக்காத தொலை தூர கிராமங்களுக்குச் சென்று அங்கு வைத்திய வசதியே கிடைக்காமல் அவல நிலையில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவ பணியாற்ற முன்வர வேண்டும்.

பிற மக்களுக்குக் கிடைக்கும் மருத்து வசதிகள், அதி நவீன மருந்துகள் அவர்களுக்கும் கிடைக்க உறுதி பூண வேண்டும்.

ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்க, சேவை செய்ய டாக்டர்கள் தயக்கம் காட்டக் கூடாது.

ஆரம்ப சுகாதார மையங்களில் மிகவும் குறைந்த அளவிலான வசதிகளே இருப்பது வருத்தம் தருகிறது. அவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கார்பரேட் மருத்துவமனைகளில் உள்ள வசதிகள், ஆரம்ப சுகாதார மையங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார் கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+