பெண் புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய ராணுவம்- 2வது வீடியோ வெளியானது
டெல்லி: பெண் விடுதலைப் புலிகளின் உடல்களை அவர்களது பதுங்குமிடங்களிலிருந்து இழுத்து வந்து, உடைகளைக் களைந்து மிருகத்தனமாக இலங்கை ராணுவத்தினர் நடந்து கொள்ளும் மனிதாபிமானமற்ற செயல் அடங்கிய இன்னொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா டுடே குழுமத்தைச் சேர்ந்த ஹெட்லைன்ஸ் டுடே டிவிக்கு இந்த வீடியோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு விடுதலைப் புலி வீரர்களை நிர்வாணப்படுத்தி, கைகளை பின்னுக்குக் கட்டி தரையில் அமர வைத்து, கொடூரமாக பின்னால் இருந்து சுட்டுக் கொன்ற இலங்கை வீரர்களின் மிருகத்தனமான செயல் வீடியோ மூலம் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதை இலங்கை ராணுவம் மறுத்தது. இது கட்டுக்கதை, போலியான வீடியோ என்று கதை கூறியது. ஆனால் இந்த வீடியோ காட்சிகள் உண்மையானவையே, திரிக்கப்படவில்லை என்று ஐ.நா. உயர் அதிகாரி சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆனால் இந்த அறிக்கை தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கொஞ்சம் கூட கவலைப்பட்டது போல தெரியவில்லை.
இந்த நிலையில் இலங்கை ராணுவத்தின் இன்னொரு மிருகத்தனமான முகத்தை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று ஹெட்லைன்ஸ் டுடே டிவிக்குக் கிடைத்துள்ளது.
அந்த வீடியோவை ஹெட்லைன்ஸ் டிவி வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோ காட்சியில், இலங்கை ராணுவ வீரர்கள், விடுதலைப் புலிகளின் மறைவிடங்களிலிருந்து கொல்லப்பட்ட பெண் புலிகளை இரக்கமே இல்லாமல் இழுத்து வந்து போடுகின்றனர்.
பின்னர் அவர்களின் உடைகளைக் களைந்து நிர்வாணமாக்குகின்றனர்.
ஒரு ராணுவ வீரர் மிருகத்தை விட கேவலமாக, இறந்த பெண் புலியின் உடலில் இருந்த உடையை துப்பாக்கியால் களைந்து விட்டு கேமராவைப் பார்த்து கோரமாக சிரிக்கிறார்.
அந்த புலிகள் யார் என்பதை அடையாளும் காணும் முயற்சியும் நடைபெறுகிறது. அனைத்துப் பெண்களின் உடல்களிலும் ஒட்டுத் துணி கூட இல்லாமல் களைகின்றனர் சிங்களக் காடையர்கள்.
முல்லைத்தீவு பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது. போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவமாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.
இந்த வீடியோக் காட்சியின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை என்றும் ஹெட்லைன்ஸ் டுடே தெரிவித்துள்ளது.
இருப்பினும் முதல் முறை வெளியான வீடியோவை காட்சிகள் எப்படி உண்மையானவை என்று தெரிய வந்ததோ, அதேபோல இந்தக் காட்சிகளும் உண்மையானதாகவே இருக்கலாம் என்று தெரிகிறது.
இந்திய மீடியாக்களில் குறிப்பாக ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களில் இலங்கை இனப்படுகொலை குறித்து பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு, ஈழத் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்த நிலையில்தான் இந்திய மீடியா நிறுவனம் ஒன்றுக்கு, குறிப்பாக ஆங்கில தொலைக்காட்சிக்கு பெண் புலிகளை ராணுவத்தினர் கொடூரமாக கையாளும் காட்சி அடங்கிய வீடியோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல இதுவும் போலியான வீடியோ என்று இலங்கை ராணுவம் உடனடியாக மறுத்து விட்டது.
ஹெட்லைன்ஸ் டுடேவுக்குக் கிடைத்த இதே வீடியோவின் நகல் நிச்சயம் ஐ.நா. சபை வரை போகக் கூடும் என நம்பப்படுகிறது. அப்போது இலங்கை ராணுவத்தின் மிருகத்தனம் மீண்டும் அம்பலமாகும் என தெரிகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications