டெல்லி-கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு!
டெல்லி: மருத்துவ சிகிச்சைக்காக டெல்லிக்கு வந்த இளம் பெண்ணை வாலிபர்கள் கடத்தி, கத்திமுனையில் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்காக டெல்லி வந்தார்.
டெல்லியில் தனது மாமா வீட்டில் தங்கியிருந்தார். கடந்த திங்கட்கிழமை வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த அந்தப் பெண்னை வாலிபர் ஒருவர் கடத்தி தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் தனது கூட்டாளிகள் இருவரை வீட்டிற்கு வரவழைத்து மூவரும் கூட்டாக சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி இளம் பெண்ணை கற்பழித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது தொடர்ந்து அப்பெண் கூச்சலிடவே அக்கம் பக்கம் இருந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
கூட்டத்தை கண்டதும் வாலிபர்கள் தப்பியோட முயன்றனர். எனினும் இரண்டு வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
பிடிபட்ட வாலிபர்கள் 20, 21 வயதுடையவர்கள். தப்பியோடியவன் 18 வயதுக்கும் குறைவானவன் என போலீசார் கூறுகின்றனர்.
இளம் பெண்ணை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications