திருச்செந்தூர் வள்ளி குகை திடீர் முடல்- பக்தர்கள் அதிர்ச்சி

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் சுப்பிரமணியசாமி கோயிலின் வடக்கு கிரி பிரகாரத்தில் வள்ளி குகை உளளது.
யானை வடிவில் விநாயகர் துரத்திய போது வள்ளி இக்குகையில் ஓளிந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள வள்ளிக்கு தினமும் பூஜைகள் நடத்தப்படும். காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு சாத்தப்படும்.
திருச்செந்தூர் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வள்ளி குகைக்கு சென்று தரிசனம் செய்வார்கள். வழக்கம் போல் நேற்று காலை பக்தர்கள் வள்ளி குகைக்கு சென்றபோது வாசல் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விசாரித்த போது திருச்செந்தூர் வள்ளி குகையில் திரிசுதந்திரர்கள் மணிகண்டன், குமார் ஆகியோர் பூஜைகளை செய்ய 2004ம் ஆண்டு கோயில் இணை ஆணையராக பணியாற்றிய பக்கிரி சாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோயில் சுற்று சன்னதிகளில் சிவச்சாரியார்கள் பூஜை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி சிவச்சாரியார்கள் பூஜை செய்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த ஜனவரி 23ம் தேதி வள்ளி குகையில் சிவச்சாரியார்கள் பூஜை செய்ய இணை ஆணையர் பாஸ்கரன் உத்தரவிட்டார். இதற்கு திரிசுதந்திரர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சிவாச்சாரியர்கள் பூஜை செய்யும்போது பிரச்சனை ஏற்படும் என்று கருதியதால் வள்ளி குகைக்கு பூட்டு போடப்பட்டது.
கோயில் நிர்வாகத்திடம் விசாரித்தபோது சிவாச்சாரியார்கள் பூஜை செய்ய திரிசுதந்திரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் நடை திறக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications