கொலையான எஸ்.ஐ. குடும்பத்துக்கு வாசன் நிதியுதவி
Subscribe to Oneindia Tamil

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள முள்ளிகுளத்தில் உள்ள எஸ்.ஐ. வெற்றிவேலின் மனைவி பிரேமாவின் வீட்டிற்கு இன்று காலை ஜி.கே.வாசன் சென்றார்.
அவருடன் எம்.எல்.ஏ பீட்டல் அல்போன்ஸும் உடன் சென்றார். பின்னர் வெற்றிவேலின் மனைவி பிரேமா உள்ளிட்டோரை சந்தித்து வாசன் ஆறுதல் கூறினார். வெற்றிவேல் படத்துக்கும் மாலை அணிவித்தார்.
பின்னர் பிரேமாவிடம் ரூ. 50,000 நிதியுதவியை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிச்சயம் விரைவில் அமலுக்கு கொண்டு வரும்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்தது போலவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் சந்தித்தார். ஒரு விழாவில் நடந்த இந்த சந்திப்பு சாதாரணமானது. இதில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications