மாஜி அமைச்சரின் மகன் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் கொலை-பரபரப்புத் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ரியல் எஸ்டேட் அதிபரைக் கொலை செய்து ஆந்திராவுக்குக் கொண்டு போய் எரித்த வழக்கில் மாஜி அதிமுக அமைச்சர் நடேசன் பால்ராஜின் மகன் குமரகுருபரன் மீது போலீஸார் கொலைக்கான சதித் திட்டத்தை வகுத்தது உளளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை தியாகராயநகரைச் சேர்ந்தவர் மணி. ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கடந்த 7ம் தேதி கடத்தப்பட்டார். பின்னர் கொலை செய்யப்பட்ட அவரது உடல் எரிந்த நிலையில் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில், குறைந்த வட்டிக்கு வங்கிகளிலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமும் கோடிக்கணக்கான பணத்தை கடனாக வாங்கி தருவதாக கூறி ஏராளமான பேரிடம் மணி லட்சக்கணக்கில் கமிஷன் பணம் வாங்கி மோசடி செய்து வந்துள்ளார்.

அவரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்த சிலர் சேர்ந்து இந்த படுகொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரிய வந்தது.

மணியிடம் கமிஷன் பணம் கொடுத்து ஏமாந்த பூபதி என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் நடேசன் பால்ராஜின் மகன் குமரகுருபரன், அவரது பெண் உதவியாளர் லீனா ரோஸ்லின் என்பவரும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

குமரகுருபரனிடம் ரூ.50 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.54 ஆயிரம் கமிஷனாக பெற்று மணி ஏமாற்றியுள்ளார். இதேபோல, மணியிடம் ஏமாந்தவர்கள் பட்டியலில் உள்ள கந்தசாமி, கணேசன், பாபு என்ற சிவா ஆகியோரும் இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். கணேசன் கோவையில் சரண் அடைந்துவிட்டார்.

மணியை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட மாருதி வேன் ஓட்டிய டிரைவர் சரவணனையும் போலீசார் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

இந்த வழக்கில் நல்லவர்போல் நடித்த மணியின் அலுவலகத்தில் உதவியாளராக வேலைபார்த்து வந்த தயாளன் என்பவரை முக்கிய குற்றவாளியாக போலீசார் கருதுகிறார்கள்.

காரணம், இந்த தயாளன்தான், மணியை கடத்தி சென்று அடித்து உதைத்து பணத்தை வசூலிக்கும்படி குற்றவாளிகளுக்கு சதித்திட்டம் தீட்டி கொடுத்துள்ளதாக தற்போது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதோடு, 2 நாட்கள் அடைத்து வைத்துவிட்டு, இனிமேல் மணியை உயிரோடு விட்டால் அனைவரையும் போலீசில் காட்டிக் கொடுத்து விடுவார் என்றும், எனவே, மணியை கொன்று விடுங்கள் என்றும் தயாளன்தான் குற்றவாளிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினாராம். இதனால் அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

கொலை நடந்தபோது குமரகுருபரன் இல்லை..

மணி திருவள்ளூரில் உள்ள குமரகுருபரனின் அலுவலகத்தில்தான் 2 நாள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். கொலைதிட்டமும் அங்கு தான் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால் மணியை கொலை செய்தபோது குமரகுருபரன் உடன் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கடத்தல் மற்றும் கொலை சதித்திட்டம் தீட்டியதற்காக குமரகுருபரனும், கொலை சம்பவம் தெரிந்தும் உண்மையை மறைத்த குற்றத்திற்காக குமரகுருபரனின் உதவியாளர் லீனா ரோஸ்லினும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினார்கள்.

கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+