நாளை பௌர்ணமி-சந்திரன் கூடுதலாக பிரகாசிக்கும்!
Subscribe to Oneindia Tamil

இந்தாண்டு முழுவதிலும் வரவுள்ள பௌர்ணமிகளை விட நாளைய தினத்தில் 30 சதவீதம் கூடுதல் பிரகாசமாகவும், 15 சதவீத பெரிய அளவிலும் முழு நிலவு பூமிக்கு காட்சி அளிக்கும் என கணிக்கப்படுகிறது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள 'ஸ்பேஸ்' (Science Popularization Association of Communicators and Educators-SPACE) அமைப்பின் இயக்குனர் சி.பி.தேவ்கன் கூறுகையில், 'நாளை இரவு 8 மணிக்கு மிகப் பிரகாசமான முழு நிலவை பார்க்க முடியும்.
பொதுவாக பூமியில் இருந்து சந்திரன் சுமாராகவும், சராசரியாகவும் 3 லட்சத்து 84 ஆயிரத்து 630 கி.மீ தூரத்தில் இருப்பதாக கணிக்கப்படுகிறது.
சந்திரன் சுற்று வட்டப்பாதையில் பூமியை நோக்கி சற்று சாய்வான நிலையில் வருவதால் நாளைய தினத்தில் இரண்டுக்கும் இடையிலான தொலைவு சுமார் 50,000 கி.மீ குறையும். இதன் காரணமாக சந்திரன் பிரகாசமாகத் தெரியும் என்றார்.












Click it and Unblock the Notifications