ரயிலில் கொலை: மாஜி வங்கி மேலாளர் உட்பட 5 பேர் கைது
நெல்லை: ஓடும் ரயிலில் மதுரை பொறியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் வங்கி மேலாளர் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ராஜேஷ் பிரபு. பொறியாளரான இவர் குஜராத்தில் வேலை பார்த்துவந்தார்.
கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி பொங்கல் பண்டிகைக்காக குஜராத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கா ராஜேஷ் பிரபு ரயிலில் புறப்பட்டு 13ம் தேதி நாகர்கோவில் வந்தார்.
பின்னர் அங்கிருந்து மதுரை செல்வதற்காக காலை 5 மணிக்கு திருப்பதி வழியாக மும்பை செல்லும் ரயிலில் ஏறினார்.
பின்னர் அந்த ரயில் நெல்லை வந்தபோது ராஜேஷ் பிரபு கத்துகுத்து காயங்களுடன் பெட்டிக்குள்ளேயே இறந்து கிடப்பதை பயணிகள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
கொலை குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இவ்வழக்கு நெல்லை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
ஒரு வருடத்திற்கு மேலாகியும் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் 4 மாதங்களுக்கு முன் மதுரை சிபிசிஐடி போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் கொலையில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகேயுள்ள லெட்சுமிபுரத்தை சேர்ந்த ரெங்கையா, அவரது மகன்கள் ஜெயக்குமார் ஜோதி, இன்ஜினியர் ஜெயராம் ஜோதி, மற்றும் சுப்பிரமணியன் ராஜா, ரமேஷ் ஆகிய 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications