234 சட்டசபை தொகுதிகளுக்கும் புதிய செயலாளர்கள்-ஜெ அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் புதிய தொகுதிச் செயலாளர்கள், இணைச் செயலாளர்களை நியமித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சமீபத்தில் அதிமுக உட்கட்சித் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து கிளை, வார்டு, வட்டம், ஒன்றியம், நகரம் மற்றும் மாவட்ட அளவில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை ஜெயலிலதா அறிவித்தார்.
மேலும் எம்ஜிஆர் மன்றம், இளைஞர் பாசறை போன்றவற்றுக்கும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
இந் நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் புதிய தொகுதிச் செயலாளர்கள், இணைச் செயலாளர்களை அறிவித்துள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications