வழிப்பாட்டுத் தலங்களை தாக்குவோரின் கையை வெட்டுங்கள்: எதியூரப்பா
கார்வார்: கோயில், மசூதி, மற்றும் தேவாலயங்களைத் தாக்குவோர் கையை துண்டிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறினார்.
கர்நாடகாவில் மைசூர் மற்றும் பத்கலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடந்தன. அப்போது மேரி மாதா சிலை உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தென் கன்னட மாவட்டம் ஜோயிடா தாலுகாவில் உள்ள கிராமத்தில் ஸ்ரீசென்னபசவேஸ்வரா கோயில் திருவிழாவில் வெள்ளித் தேரோட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் எதியூரப்பா.
அப்போது கூட்டத்தில் ஆவேசமாக பேசிய எதியூரப்பா, கோயில், மசூதி, மற்றும் தேவாலயங்களைத் தாக்குவோரை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அவர்களது கைகள் துண்டிக்கப்பட வேண்டும்.
அத்தகையவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும், வழக்குப் பதிவு செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவுக்காக காத்திருக்கக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications