ப.சிதம்பரத்தின் பாக். பயணம்-அரசு முடிவெடுக்கவில்லை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்குச் செல்வது குறித்து இன்னும் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அடுத்த மாதம் சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ப.சிதம்பரம் கலந்து கொள்ளக் கூடும் எனத் தெரிகிறது.
ஆனால் இதுவரை மத்திய அரசு ப.சிதம்பரத்தின் பாக். பயணம் குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
ஒருவேளை ப.சிதம்பரம் பாகிஸ்தான் செல்ல முடிவெடுக்கப்பட்டால், மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் செல்லும் முதல் இந்தியத் தலைவராக ப.சிதம்பரம் இருப்பார்.












Click it and Unblock the Notifications