தர்மபுரியில் நாளை பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்
சென்னை: இடைத் தேர்தல் நடைபெறவுள்ள பென்னாகரம் தொகுதி அடங்கியுள்ள தர்மபுரியில், நாளை பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜனவரி மாதம் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தர்மபுரியில் நடைபெறுகிறது.
தர்மபுரி நகர பிரதான சாலையில் அமைந்துள்ள வன்னியர் குல சத்திரியர் திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்குகிறார்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள், சட்டபேரவை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் கிடுக்கிப்பிடி வியூகத்தை உடைத்து எப்படி வெற்றி 'மாம்பழத்தைப்' பறிப்பது என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக திமுகவை எதிர்கொள்ள பிற கட்சிகளின் ஆதரவை நாடலாமா என்ற ஆலோசனையும் நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications