திருமானூர் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 79 வீரர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
திருமானூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 79 வீரர்கள் காயம் அடைந்தனர்.
கீழக்கொளத்தூர் கிராமத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 187 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டன. இதில் 18 காளைகள் தகுதி இல்லாததால் அவிழ்த்து விடப்படவில்லை.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடங்கியதும், சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர்.
அப்போது காளைகள் முட்டித் தள்ளியதில் 79 வீரர்கள் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 9 பேர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications