தமிழகத்தில் இன்னும் 2 வாரத்துக்குப் பனி இருக்கும்
சென்னை: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் இரவு நேரப் பனி இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பின் பனிக் காலம் நடந்து வருகிறது. இதன் காரணமாக இரவில் கடும் பனியும், பகலில் கடும் வெயிலுமாக காணப்படுகிறது.
இதனால் சளி, காய்ச்சல் போன்றவை மக்களை அவஸ்தைக்குள்ளாக்கி வருகிறது. இந்தப் பனி இன்னும் 2 வாரங்களுக்கு நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை பனிப்பொழிவு மிக மிகக் குறைவாகவே இருந்தது. ஜனவரி 15ம் தேதிக்கு பிறகுதான் பனி அதிகமாக உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
குளிர் காலத்தில் இரவில் தரையின் வெப்பநிலை மிகக்குறைவாக இருக்கும். அதுமட்டுமல்ல வானத்தில் மேகங்களும் இருக்காது. இதனால் தரை இரவில் குளிர்ந்து. அதனால் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
இந்த பனிப்பொழிவு பிப்ரவரி 10ம் தேதி முதல் குறையும். அதிகபட்சம் பிப்ரவரி 14ம் தேதி வரை இருக்கும். அதன்பின்னர் வெயில் தன்மை சற்று அதிகரிக்கும் என்றனர்.
மார்கழியில் மனை குளிரும், தையில் தரையெல்லாம் குளிரும் என்பார்கள். அதற்கேற்ப தற்போது இரவில் வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவுக்கு படு குளிராக உள்ளது. இன்னும் 2 வாரங்களுக்கு இது நீடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் அதற்குப் பிறகு குளிரின் கொட்டம் சற்று அடங்கும் என எதிர்பார்க்கலாம்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications