சிக்கியது சிலை திருட்டுக்கும்பல்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு
சென்னை: தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சிலைகள் திருட்டு கும்பலிடமிருந்து மீட்கப்பட்டன. இது தொடர்பாக பாதிரியார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு விடுதியில் சிலை திருட்டு கும்பல் தங்கியிருப்பதாக போலீசுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விடுதியை முற்றுகையிட்டனர்.
விடுதியில் தங்கியிருந்த வேலூர் மாவட்டம் பள்ளூரைச் சேர்ந்த இம்மானுவேல் என்கிற பாதிரியார், திருநெல்வேலி மாவட்டம் செல்லிய நல்லூரைச் சேர்ந்த மாடசாமி, ராஜபாளையத்தைச் சேர்ந்த பிச்சை மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அங்கிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையை போலீசார் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சிலைகளை திருடியது தெரியவந்தது.
தமிழகத்தில் திருடப்படும் சிலைகளை பாதிரியார் இம்மானுவேல், புதுச்சேரி கோட்டங்குப்பத்தைச் சேர்ந்த மாரிசாமி மூலம் வெளி நாடுகளுக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மாரிசாமியும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 மகாவீரர் ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டன. இவை திருவண்ணாமலை, ஈசா குளம் என்ற இடத்தில் உள்ள புகழ்பெற்ற திகம்பரர் ஜெயின் கோயிலிருந்து திருடப்பட்டுள்ளது.
இதேபோல சிற்றுடையூர் லட்சுமி நாராயணன் பெருமாள் கோயிலிருந்து திருடப்பட்ட நாராயணன், விநாயகர் ஆகிய சிலைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 11 விலை உயர்ந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாரிசாமி, இம்மானு வேல், ஜெகன்நாதன், வேலு, மாடசாமி, பிச்சுமணி, கங்காஜலம் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு கூடுதல் டிஜிபி திலகவதி இத்தகவலை தெரிவித்தார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications