நியூசிலாந்தில் இந்தியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர் கொலை

மும்பையைச் சேர்ந்த ஹிரென் மோகினி (39), 6 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். ஆக்லாந்து பகுதியில் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
டாக்சி டிரைவராக வேலை செய்துவந்த இவர், மவுன்ட் ஈடன் பகுதியில் நேற்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டார். கட்டணம் தொடர்பாக பயணியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கழுத்து மற்றும் உடலின் பல பகுதிகளில் கத்தியால் குத்திய மர்ம நபர், ஹிரெனின் காரை அருகில் உள்ள மரத்தில் மோதவிட்டு விபத்து போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்.
போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர். இதற்கிடையே இச்சம்பவத்துக்கு நியூசிலாந்தின் டாக்சி உரிமையாளர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டாக்சி டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், டாக்சிக்களில் பாதுகாப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இப்பிரச்னை குறித்து பிரதமர் ஜான் கீ கூறுகையில், 'கடந்த 14 மாதங்களில் டாக்சி டிரைவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் 2 முறை நடந்துவிட்டது. அரசு இதை கண்டுகொள்ளாமல் இருந்துவிடாது. டாக்சிக்களுக்கான கட்டாய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு நிச்சயம் பரிசீலிக்கும்' எனக் கூறினார்.
நியூசிலாந்துக்கு அருகே உள்ள ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் நியூசிலாந்திலும் இச் சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications