சைஃப் அலி கான் ரவுடியாம்!-கூறுகிறார் உத்தவ் தாக்கரே!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக கடந்த சில நாட்களாக ஷாருக் கானையும், ஆமிர் கானையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார் பால் தாக்கரே. அக்கட்சியினர் ஷாருக் கானுக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே, சைஃப் அலி கான் மீது பாய்ந்துள்ளார். அவரை ஒரு ரவுடி என்று காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார்.
இதுகுரித்து அவர் கூறுகையில், பத்மஸ்ரீ விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சைஃப் அலி கான். அவர் ஒரு தபோரி (மும்பையில் ரவுடிகளுக்கு இப்படி ஒரு பெயர் உண்டு). அவர் எப்படி இந்த விருதுக்குப் பொருத்தமானவராக இருக்க முடியும் என்று கூறியுள்ளார் உத்தவ் தாக்கரே.
சைஃப் அலி கானுக்கு பத்மஸ்ரீ விருது தருவதை எதிர்த்து சிவசேனாவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதேபோல பிஷ்னாய் சமுதாயத்தினரும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும் ஜோத்பூரில் சைஃப் அலி கானின் கொடும்பாவியையும் கொளுத்தினர்.
கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹம் சாத் சாத் ஹெய்ன் என்ற படத்தின் ஷூட்டிங்கின்போது 2 கருப்பு மான்களை சுட்டுக் கொன்றதாக சைஃப் அலி கான் மீது தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவருக்கு பத்மஸ்ரீ விருது தருவது கொடுமையானது என்று அது விமர்சித்துள்ளது.
கடந்த ஆண்டும் சைஃப் அலி கான் சிவசேனாவின் ஆத்திர வலையில் சிக்கினார். அவரும் காதலி கரீனாவும் இணைந்து நடித்த குர்பான் பட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதை எதிர்த்து சிவசேனாவினர் போராட்டம் நடத்தினர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த போஸ்டர்களில் கரீனா தனது முதுகை முழுக்கக் காட்டியபடி போஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'தபோரி' என்றால் என்ன...?
கொச்சை இந்தியை பேசியபடி, தெருவில் வம்புச் சண்டை வளர்ப்போர், ரவுடித்தனம் செய்வோரை தபோரி என்று மராத்தியர்கள் அழைப்பது வழக்கம்.
இவர்கள் கொச்சை இந்தியை மட்டுமல்லாமல் தமிழ், குஜராத்தி உள்ளிட்ட பல்வேறு பாஷைகளையும் கலந்து பேசுவர்.
ஆட்களை அடிப்பதற்கும், திருடுவதற்கும், மிரட்டுவதற்கும் இவர்களை தாதாக்கள் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். தபோரிகள் என அழைக்கப்படுவோர் பெரும்பாலம் உ.பி., பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
தபோரி என்பது மராத்தி வார்த்தையாகும். இவர்கள் பேசும் இந்திக்கு பம்பையா ஹிந்தி என்றும் ஒரு பெயரிட்டுள்ளனர் மராத்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications