வாடிக்கையாகிவிட்ட ஜெயலலிதா வீடு முற்றுகை!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: அதிமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டங்கள் நடப்பது அதிகரித்துவிட்டது.

இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களை திமுக இழுத்துவிடுவதாலும், திமுகவில் சேர விரும்பாதவர்கள் தாங்களாகவே தேமுதிகவுக்குப் போய்விடுவதாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஜெயலலிதா தவிர்த்து வருகிறார்.

இதையே சாக்காக பயன்படுத்தி கட்சியின் நிர்வாகிகளுக்கு எதிராக ஜெயலலிதாவின் வீட்டுக்கே வந்து தைரியமாகப் போராட்டம் நடத்த ஆரம்பித்துவிட்டனர் அதிமுகவினர்.

சமீபத்தில் நடந்து முடிந்த உட்கட்சித் தேர்தலில் பல இடங்களிலும் பதவிகளை மாநில, மாவட்ட நிர்வாகிகள் பணம் வாங்கிக் கொண்டு விற்றுவிட்டதாக அதிமுக தொண்டர்கள் பரவலாக புகார் கூறி வருகின்றனர்.

ஆனால், இந்த நிர்வாகிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் ஜெயலலிதா உள்ளார். இவர்களை பதவி நீக்கினால் அவர்களையும் அவர்களது ஆதரவாள்களையும் திமுக இழுத்துப் போட்டுவிடுகிறது. திமுகவை விரும்பாதவர்கள் தாங்களாகவே தேமுகவுக்குச் சென்றுவிடுகின்றனர்.

இதனால் தவறு செய்யும் நிர்வாகிகளையும், தனது வீட்டை முற்றுகையிடும் கட்சியினரின் போராட்டங்களையும் ஜெயலிலதா அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பல மாவட்ட அதிமுகவினரும் அடுத்தடுத்து போயஸ் கார்டனுக்கு வந்து போராட்டம் நடத்திவிட்ட நிலையில் நேற்று கடலூர் மேற்கு மாவட்டத்தினர் வந்து ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டனர்.

சமீபத்தில் உட்கட்சித் தேர்தல்களையடுத்து இந்த மாவட்டச் செயலாளராக மீண்டும் அருண்மொழித்தேவன் அறிவிக்கப்பட்டார்.

இந் நிலையில் நேற்று இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 250 பேர் என்ஜினீயர் அய்யாசாமி தலைமையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டனர்.

அருண்மொழித்தேவனுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் கூறுகையில், கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றிய செயலாளர் பதவிகளில் 8 பதவிகளை தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கே அருண்மொழித்தேவன் ஒதுக்கிவிட்டார்.

மேலும் ஒன்றிய, நகர செயலாளர்கள் பதவிகள் விலை பேசி விற்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டச் செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இது தொடர்பாக அம்மாவிடம் புகார் கொடுக்க வந்துள்ளோம் என்றனர்.

ஆனால், இவர்கள் யாரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை. ஜெயலலிதாவின் வீட்டு காவலாளிகள் சிலரை மட்டும் உள்ளே அனுமதித்தனர். அவர்கள் உள்ளே சென்று ஜெயலலிதாவிடம் உதவியாளரிடம் புகார் மனுவை தந்துவிட்டு கலைந்து சென்றனர்.

தனது கட்சியிலும் எதிர்க் கட்சி என்ற முறையலும் ஜெயலலிதா மிகவும் பலவீனப்பட்டுவிட்டதையே இந்தப் போராட்டங்கள் காட்டுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+